

நெல்லை:
நெல்லை முன்னீர்பள்ளம் அருகே நடுத்திடியூர் பகுதியை சேர்ந்தவர் இசக்கி தாஸ் (வயது35). இவர் தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார்.
இவர் பாளை தியாகராஜ நகரில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் விற்பனை செய்யும் மையம் நடத்தி வந்தார். நேற்று அந்த அலுவலகத்திற்கு சென்ற அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இசக்கி தாஸ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடை பெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டதாகவும், இதற்காக ரூ.7 லட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்ததாகவும் கூறப் படுகிறது.
ஆனால் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியா சத்தில் அவர் தோல்வியை தழுவியதால் மனம் உடைந்து காணப்பட்டார். மேலும் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.