திருக்குறுங்குடி நம்பி கோவிலில் குவிந்த பக்தர்கள்

தை மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு திருக்குறுங்குடி நம்பி கோவிலில் நேற்று சுவாமி தரிசனத்திற்காக திரளான பக்தர்கள் குவிந்தனர்.
நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த காட்சி.
நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த காட்சி.
Published on

களக்காடு:

108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழும் திருக்குறுங்குடி மலை நம்பி கோவிலில், தை மாதம் கடைசி சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கமாகும்.

அதன்படி நேற்று நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்வதற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், நேற்று முன் தினம் மாலையிலிருந்து பக்தர்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாத யாத்திரை குழுவினர் வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 9.45 மணிக்கு நம்பி கோவில் ரோட்டில், சப்பரங்களுடன் பாதயாத்திரை வந்த பக்தர்களிடம், இரவு பாதுகாப்பில் இருந்த போலீசார், செக் போஸ்ட் வரை செல்ல அனுமதியில்லை.இரவில் கீழே தங்கி விட்டு காலையில் செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த பாதயாத்திரை குழுவினர் சப்பரங்களுடன் நம்பி கோவில் ரோட்டில் போராட்டம் நடத்தினார்கள்.அதன் பின் போலீசார் அவர்களை அனுமதித்துள்ளனர். ஆனால் 10.30 மணிக்கு பின்னர் வந்த சப்பரங்களை செக்போஸ்ட் வரை கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

ஏற்கனவே பாதயாத்திரை வந்த களைப்பு, இரவில் நம்பி கோவிலில் தங்க தடை, அன்னதானத்துக்கு தடை என்ற வேதனையில் இருந்த பக்தர்களுக்கு போலீசாரும் தடுத்ததால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

இதையடுத்து நேற்று காலையிலிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பாதயாத்திரை குழுவினர் மலைப் பாதையில் சென்று, நம்பியாற்றில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

2 மாதத்துக்குப் பின்னர் நேற்று, காலையிலிருந்தே நம்பி கோவில் மலையில் லேசான மழை பெய்து வந்தது.அதன்பின் மதியத்திலிருந்து நல்ல பலத்த மழையாக மலைப் பகுதியில் பெய்தது.மழையையும் பொருட்படுத்தாமல், கோவில் பிரகாரத்தில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடந்தது.

மலையில் அன்னதானத் திற்கு தடை நீட்டிப்பதால், பாரஸ்ட் செக்போஸ்ட்டுக்கு வெளியே வைத்து பல்வேறு ஊர்களைச் சேர்ந்த அன்னதான குழுவினரின் அன்னதானம் நடந்தது.மாலை 3 மணிக்குப் பின்னர் செக்போஸ்ட்டிலிருந்து பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.

எஸ்.பி.சரவணன் உத்தரவுப் படி டி.எஸ்.பி.காந்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நம்பி கோவில் ரோடு, செக்போஸ்ட், நம்பி கோவில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com