

கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தலைவராக இருந்தவர் தி.மு.க. நகர செயலாளர் இசக்கிப்பாண்டியன்.
இவர் தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கல்லிடைக்குறிச்சி 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பதவி சுழற்சி முறையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இசக்கிப் பாண்டியன் மனைவி பார்வதி 13-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இங்கு தி.மு.க. கூட்டணி மொத்தம் உள்ள 21 வார்டுகளில் 12 வார்டுகளை கைப்பற்றி உள்ளது,
இதேபோன்று அ.தி.மு.க. சார்பில் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவராக இருந்த முத்துகிருஷ்ணன் என்ற கண்ணன் 8-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இவரது மனைவி சூர்யகலா 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.