

நெல்லை:
தமிழகம் முழுவதும் கடந்த 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது.
ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண் ணிக்கை நடை பெறும். நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சி ஆகியவற்றில் பதிவான ஓட்டுப்பதிவு எந்திரங்கள், ஓட்டு எண்ணும் இடங்களான 5 மையங்களில் வைக்கப் பட்டுள்ளன.
நெல்லை மாநகராட்சி, சங்கர் நகர், நாரணம்மாள்புரம் பேரூராட்சிகளின் வாக்குகள் பாளை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகிறது.
அம்பை, சிங்கை நகராட்சிகள் மற்றும் கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பேரூராட்சி ஓட்டுகள் அம்பை, ஏ.வி.ஆர். எம்.வி. மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்படுகிறது.
களக்காடு நகராட்சி, முனைஞ்சிப்பட்டி, நாங்குநேரி, திசையன்விளை பேரூராட்சி களின் ஓட்டுகள் நாங்குநேரி நம்பிநகர் பிரான்சிஸ் பள்ளியில் எண்ணப்படுகிறது.
சேரன்மகாதேவி, கோபால சமுத்திரம், மேலச்செவல், முக்கூடல், பத்தமடை, வீரவநல்லூர் ஆகிய பேரூராட்சிகளின் ஓட்டுகள் சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகின்றன.
ஏர்வாடி, திருக்குறுங்குடி, வடக்கு வள்ளியூர், பணகுடி ஆகிய பேரூராட்சிகளின் ஓட்டுகள் வள்ளியூர் பாத்திமா பள்ளியில் வைத்து எண்ணப்படுகின்றன.
ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு அந்தந்த வேட்பாளர்களின் ஏஜெண்டு கள் 1 மணி நேரத்திற்கு முன்ன தாகவே சென்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காத்திருக்க வேண்டும்.
எந்த வார்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற போகிறது என்று மைக்கில் முன்கூட்டியே அறிவிப்பார்கள். அதைத்தொடர்ந்து அந்த வார்டின் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல வேண்டும்.
அந்த வார்டு ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் அவர்கள் வெளியேற்றப்படு வார்கள். அதன் பின்னர் அடுத்த வார்டுகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
ஓட்டு எண்ணிக்கையின் போது ஏஜெண்டுகள், வேறு எந்த பொருளும் கொண்டு செல்ல கூடாது. தேர்தல் ஆணையத்தால் வழங்கப் பட் டுள்ள அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
பாளை என்ஜினீயரிங் கல்லூரியில் மாநகராட்சி பகுதியில் பதிவான ஓட்டுக்களை எண்ணுவதற்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. இங்கு ஒவ்வொரு மேஜைக்கும் 4 ஊழியர்கள் பணியில் இருப்பார்கள்.
மாநகராட்சி பகுதியில் உள்ள 1-வது வார்டு முதல் தொடங்கி 55-வது வார்டு வரை ஒவ்வொரு வார்டாக ஓட்டுகள் எண்ணப்படும்.
நகராட்சி பகுதிகளில் ஓட்டு எண்ணுவதற்காக வார்டுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப குறை வான மேஜைகள் பயன்படுத்தப் படுகிறது. பேரூராட்சி பகுதி களில் ஓட்டுகளை எண்ணு வதற்காக 2 மேஜைகள் முதல் 3 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணும் அறையில் அந்தந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரி கள் ஒவ்வொரு வார்டாக வெற்றி பெறும் கவுன்சிலர் விபரங்களை உடனுக்குடன் அறிவிப்பார்கள்.
பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பகல் 12 மணிக்குள் தெரியும். அதுபோல் நகராட்சிகளின் முடிவுகளும் பகல் 12 மணிக்குள் அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் மட்டும் ஓட்டு எண்ணிக்கை மாலை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டு எண்ணும் மையத்திற் குள் வெளியாட்கள் யாரும் செல்ல முடியாதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையத்திற்குள் செல்லும் ஏஜெண்டுகளும் முழு அளவில் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஓட்டு எண்ணப்படும் காட்சிகள் அனைத்தும் அந்த அறைகளில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவு செய்யப்படுகிறது. ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வெளியேயும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.