பேட்டையில் சுமை தூக்கும் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

பேட்டையில் சுமை தூக்கும் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

பேட்டை எம்.ஜி.ஆர்.  நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது33). இவருக்கு அமுதா என்ற மனைவியும், 2 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

சரவணன் டவுன் நயினார்குளம் மார்க் கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 16-ந் தேதி இரவு திடீரென சரவணன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது பெண் குழந்தை ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. 

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சரவணன் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து  தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com