கோப்புப்படம்
கோப்புப்படம்

லாரி மோதி தொழிலாளி பலி

நெல்லை அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார்.
Published on

நெல்லை:

களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் மகராஜன் (வயது 55), கூலித்தொழிலாளி. 

இவர் கூலி வேலைக்காக சைக்கிளில் நெல்லை பேட்டை அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மகாராஜனை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார்.

இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com