நெல்லை அரசு மருத்துவமனையில் மக்கும் குப்பையை பிரித்து உரமாக்கும் திட்டம் விரைவில் தொடக்கம்- கலெக்டர் பேச்சு

நெல்லை அரசு மருத்துவமனையில் மக்கும் குப்பையை பிரித்து உரமாக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறினார்.
தூய்மை பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்து பேசிய காட்சி.
தூய்மை பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்து பேசிய காட்சி.
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சுத்தப் படுத்தும் நோக்கில் நம் மருத்துவமனை, மகத் தான மருத்துவமனை என்ற தூய்மை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் மாதம் முழுவதும் அரசுமருத்து வமனைகள் சுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி இன்று நெல்லை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தூய்மை நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி வரை அரசு மருத்துவமனை, அரசு ஆரம்பசுகாதார நிலையங் களில் தூய்மை பணிகள் நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மருத்துவ மனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் போடு வதை தவிர்த்து அதற்காக வைக்கப்பட்டுள்ள தொட்டியில் போட வேண்டும். பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க ஒத்துமழைப்பு கொடுக்க வேண்டும்.

நோயாளிகளின் உறவினர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை மருத்துவ மனைக்கு எடுத்து வர வேண்டாம்.

நெல்லை அரசு மருத்துவமனையில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம்பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக்கும் திட்டம் மற்றும் மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.  

மருத்துவமனைக்கு வருபவர்கள் மருத்துவ மனையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பது கடமை. அதனை மருத்துவமனை பணியாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மருத்துவ மனை டீன் ரவிச்சந்திரன், சூப்பிரண்டு பால சுப்பிரமணியன், நகர்நல அலுவலர் டாக்டர் ராஜேந் திரன், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com