சித்தூர் தென்கரை மகாராசேசுவரர் கோவில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

வள்ளியூர் அருகே சித்தூர் தென்கரை மகாராசேசுவரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனர்.
சித்தூர் தென்கரை மகாராசேசுவரர் தேரோட்டம் நடைபெற்ற காட்சி.
சித்தூர் தென்கரை மகாராசேசுவரர் தேரோட்டம் நடைபெற்ற காட்சி.
Published on

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணனூர் கிராமம் நம்பி ஆற்றின் கரையில் அய்யப்பனின் அவதாரம் என்று அழைக்கப்படும் சித்தூர் தென்கரை மகா ராசேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த  11-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

9-ம் திருவிழாவான நேற்று மகாராசேசுவரர் சுவாமி தேரில் எழுந் தருளினார். பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

தேரோட்டத்தை தொடர்ந்து வில்வனம்புதூர், கண்ண நல்லூர், தங்கையம், இளங்குளம் தலைவர்மார் சமுதாயத்தின் குதிரை ஓட்டமும் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு கும்பாபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் இரவு சுவாமி புலி வாகனத் தில் திருவீதி உலாவும் நடைபெற்றது.

இன்று இரவு சுவாமி ரிஷப வாகனத்தில் திருவீதி உலாவும், 21-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் இரவு கொடியிறக்கம் நடைபெறும்.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஆய்வாளர் கார்த்திகேஸ்வரி, தக்கார் விஜயா, செயல் அலுவலர் சாலைலெட்சுமி மற்றும் கண்ணநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மகராசன், ஊராட்சி செயலர் ஆசீர் ஜெபராஜ் செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com