நெல்லையில் கனமழை காரணமாக சாக்கடை கால்வாய்களில் அடைப்பு-மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்தனர்

நெல்லையில் நேற்று கனமழை பெய்தது. இதனால் மாநகரில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் தேங்கியது. அதனை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்தனர்.
அடைப்பு சரிசெய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள்.
அடைப்பு சரிசெய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள்.
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் முழு-வதும் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது.

மாநகர பகுதியிலும் கொட்டித்தீர்த்த இந்த கனமழை காரணமாக தாழ்-வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

மேலப்பாளையம், தச்ச-நல்லூர் மண்டலங்களுக்கு உட்பட்ட ஏராளமான குடியிருப்புகளில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் செல்ல வழியில்லாமல் தெருக்-களில் தேங்கி நின்றது.

இதையடுத்து இன்று காலை மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் சென்று அந்த இடங்களை பார்வையிட்டனர்.

உடனடியாக தூய்மை பணியாளர்களை கொண்டு நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்-கைகளை மேற்-கொண்டனர்.

மேலப்பாளையம் மண்ட லத்தில் அதிகமாக அடைப்பு ஏற்பட்டு இருந்த இடங்களில் சுகாதார அலுவலர் சாகுல் அமீது மேற்பார்வையில் மாநகராட்சி சார்பில் அமைக்-கப்பட்டுள்ள நவீன எந்திரங்களை கொண்டு இந்த அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்-டனர்.

தச்சை மண்டலத்தில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் 10-வது வார்டுக்கு உட்பட்ட இளங்கோ நகரில் உள்ள தெருக்களில் ஆக்கிரமிப்பு காரணமாகவும் கனமழை காரணமாகவும் அடைப்புகள் ஏற்பட்டதால் அந்த தெரு முழுவதும் சாக்கடை நீர் தேங்கி கிடந்தது.

இதனால் வீட்டைவிட்டு பொதுமக்கள் வெளியே செல்ல வழி இல்லாமல் இருந்தனர். உடனடியாக அங்கு சென்று தூய்மை  பணியாளர்கள் அப்புறப்-படுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com