மானூரில் 20 நாட்களாக பூட்டி கிடக்கும் ஏ.டி.எம். மையம்

மானூரில் ஏ.டி.எம். மையம் 20 நாட்களுக்கு மேலாக பூட்டி கிடப்பதாக வாடிக்கைாளர்கள் புகார் தெரிவித்தனர்.
மானூரில் மூடப்பட்டிருக்கும் ஏ.டி.எம். மையம்.
மானூரில் மூடப்பட்டிருக்கும் ஏ.டி.எம். மையம்.
Published on

நெல்லை:

மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சி, ரஸ்தா, வாகைக்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பல்வேறு பணிகளுக்காக தினமும் மானூர் செல்கிறார்கள். மானூர் மெயின் ரோட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற வங்கியின் ஏ.டி.எம். கிளை அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மானூர் யூனியன் அலுவலகம், மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக பணம் எடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களாக இந்த ஏ.டி.எம்.மையம் மூடப்பட்டு கிடக்கிறது.

இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எந்திர பழுது காரணமாக மூடப்பட்டு கிடக்கிறதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தெரியவில்லை. இதனை உடனடியாக திறக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com