நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவால் பாளையங்கால்வாய் சீரமைப்பு பணி

நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவால் பாளையங்கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்றது.
பாளையங்கால்வாய் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட காட்சி.
பாளையங்கால்வாய் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட காட்சி.
Published on

நெல்லை:

நெல்லை மாநகர பகுதி யில் பொது இடங்களில் வாறுகால் தூர்வாறுதல், குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் மனு கொடுக்கின்றனர்.

அதனை விசாரித்து நிரந்தர மக்கள் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா தலைமையில் நடைபெற்றது. அப்போது பாளை பகுதியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:&

முருகன்குறிச்சியில் பாளையங்கால்வாய் கரை யோரத்தில் குப்பை கழிவுகள், மதுபாட்டில்கள் உள் ளிட்டவைகள் ஏராளமாக கொட்டப்பட்டு உள்ளது.

இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி சமீனா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மாநகர கமிஷனர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத் தலின் பேரில் தச்சை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் சந்திப்பு பகுதியில் நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டது.

இதேபோல் பாளை மண்டல அதிகாரிகள் நடவடிக்கையால் பாளையங் கால்வாய் கரைகள் சுத்தப்படுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com