பணகுடியில் இருந்து கேரள துறைமுகத்துக்கு அதிக அளவில் கனிம வளங்கள் ஏற்றி சென்ற 4 லாரிகள் பறிமுதல்

பணகுடியில் இருந்து கேரள துறைமுகத்துக்கு அதிக அளவில் கனிம வளங்கள் ஏற்றி சென்ற 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பிடிபட்ட லாரிகள்.
பிடிபட்ட லாரிகள்.
Published on: 

பணகுடி:

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் 25-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

இந்த குவாரிகளில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பணகுடி பகுதியில் தலைமை காவலர்கள் சிவபெருமாள் மற்றும் லெட்சுமணன் ஆகியோர் நள்ளிரவில் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் ராதாபுரம் பகுதியில் தனியார் கல்குவாரியில் இருந்து அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றி கொண்டு கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகம் நோக்கி சென்ற லாரிகளை பணகுடி புறவழி சாலையில் மறித்து சோதனை செய்தனர்.

அப்போது அதில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 4 லாரிகளை போலீசார் பறி முதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த வாரத்தில் பணகுடி போலீசாரால் 11 லாரிகள் பிடிக்கப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் நள்ளிரவில் 4 லாரிகள் பிடிக்க பட்டுள்ளது.

 கடந்த இரண்டு தினங் களுக்கு முன்பு ராதாபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஒரு சில குவாரிகளில் சப்-கலெக்டர் சிந்து மற்றும் ராதாபுரம் தாசில்தார் ஜேசு ராஜன் ஆகியோர் நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com