கூடங்குளம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

கூடங்குளம் அருகே பிள்ளையார்குடியிருப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள சிதம்பரத்தை சேர்ந்தவர் ஜெனிபா (31) அவரது மகளுடன் சிதம்பரத்தில் இருந்து பிள்ளையார்குடியிருப்புக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.  

அப்போது அங்கு பைக்கில்வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

கூடங்குளம் காவல் நிலையத்தில் இவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து ஆந்திராவைச் சேர்ந்த பாலாஜி என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் மற்றொரு கொள்ளையன் ஆந்திர மாநிலம் ராமநாதபுரத்தை சேர்ந்த ஜான் ரவீந்திரநாத் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com