

நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 48 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், கூட்டணி கட்சிகள் 4 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.
தி.மு.க. தலைமை கழகம் சார்பாக 48 வார்டுகளிலும் போட்டியிடும் தி.மு.க. வேட் பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி 5-வது வார்டு மற்றும் 12 வது வார்டில் தி.மு.க. வேட்பாளர்களை மாற்றி புதிய வேட் பாளர் களை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மத்திய மாவட்டம் நெல்லை மாநகராட்சி 5-வது வார்டு வேட் பாளராக அறிவிக்கப்பட்ட பால முருகன் என்ற பிரபுவுக்கு பதிலாக வி.ஜெகநாதன் 5-வது வார்டு வேட்பாளராக அறிவிக் கப்பட்டுள்ளார்.
இதுபோல நெல்லை மாநகராட்சி 12- வது வார்டு வேட்பாளராக அறிவிக்கப் பட்ட மாலாவுக்கு பதிலாக எஸ்.வி.சுரேஷ் என்பவரது மனைவி கோகுலவாணி 12-வது வார்டு வேட் பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே சங்கர்நகர் பேரூராட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த 2 வேட்பாளர்கள் நேற்று மாற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது மாநகராட்சியில் 2 வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.