களக்காட்டில் 10 அடி நீள பாம்பு மீட்பு

களக்காடு அருகே உள்ள கோவில்பத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது வீட்டில் பாம்பு புகுந்தது. அதனை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பிடிபட்ட பாம்பு.
பிடிபட்ட பாம்பு.
Published on

களக்காடு:

களக்காடு கோவில் பத்தை சேர்ந்தவர் தனராஜ் (வயது 75). தொழிலதிபர் இவரது வீட்டு தோட்டத்துக்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்தது.

இதுபற்றி களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதனைதொடர்ந்து வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடைக்கலம் பார்த்தசாரதி, மாதவன் ஆகியோர் விரைந்து சென்று பதுங்கியிருந்த 10 அடி நீளம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்தனர்.

அதன் பின் பாம்பை களக்காடு முதலிருப்பான் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். பிடிபட்ட பாம்பு சாரை பாம்பு ஆகும்.

இரை தேடி வந்த போது பாம்பு தோட்டத்திற்குள் சென்றிருக்கலாம் என்று வனத்துறையினர் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com