வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது.
வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்.
வாக்குச்சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்.
Published on

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று உள்ளவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 2 மாநகராட்சி, 12 நகராட்சி, 51 பேரூராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்கிறது.

நெல்லை மாவட்டத் தில் நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டு கவுன்சிலர் பதவி களுக்கும், 3 நகராட்சிகளில் உள்ள 69 கவுன்சிலர் பதவிகளுக்கும், 17 பேரூராட்சிகளில் உள்ள 264 கவுன்சிலர் பதவிகளுக்கும் என நெல்லை மாவட்டத்தில் 388 கவுன்சிலர் பதவிகளுக்கு 1,790 பேர் போட்டியிடுகிறார்கள்.

இதற்காக நெல்லை மாவட்டம் முழுவதும் 933 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 3,292 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக் கப்பட் டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத் திலுள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகளில் உள்ள 396 கவுன்சிலர் பதவிகளுக்கு 1,950 பேர் போட்டியிடுகிறார்கள். இதற்காக மாவட்ட முழுவதும் 750 வாக் குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரிய சுமார் 3,000 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக் கப்பட்டுள்ளார்கள்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், ஆகியவற்றில் உள்ள 413 பதவிகளுக்கு 2238 பேர் போட்டியிடுகிறார்கள். இதற்காக தென்காசி மாவட்டம் முழுவதும் 603 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் பணிபுரிய 2,500&க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

வாக்குச்சாவடி பணியில் உள்ள தேர்தல் அலுவலர்கள், இன்று அந்தந்த பயிற்சி மையத்திற்கு சென்று தங்களுக்கான வாக்குச்சாவடி பணி ஆணையை பெற்றுக் கொண்டனர். இன்று பிற்பகல் அவர்கள் தங்களுக்குரிய வாக்குச் சாவடிகளுக்கு சென்றனர்.  வாக்குச் சாவடிகளுக்கு ஓட்டுப் பதிவு எந்திரம் மற்றும் தேவையான பொருட்கள் கொண்டு செல்ல நேற்றே ஆயுதப்படை மைதானங்களில் லாரிகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இன்று காலை அந்த லாரிகள் மண்டல தேர்தல் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கைவிரலில் இடும் மை உள்பட 68 பொருட்கள் சாக்குப் பைகளில் கட்டப்பட்டு ஏற்றப்பட்டன.

பிற்பகலில் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குப் பதிவு எந்திரங்கள் உள்பட அனைத்து பொருட்களும் கொண்டு சென்று சேர்க்கப் பட்டன. அங்குள்ள வாக்குப்பதிவு அலுவலர்களிடம் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்பட அனைத்து பொருட் களும் பாதுகாப்பாக ஒப்படைக் கப்பட்டது.
 
வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்பட தேர்தலுக்கு தேவை யான பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சேர்க் கப்பட்டது முதல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி களில் அசம்பாவிதம் நடைபெறாத படி கண்காணிக்க சி.சி.டி.வி. காமிராக்களும் பொருத் தப்பட்டுள்ளன. நெல்லை மாநகர பகுதியில் மட்டும் தேர்தல் பாதுகாப்பிற்காக 1,200 போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர். நெல்லை புறநகர் பகுதியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2,500 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 7 ஆயிரத்து 200 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும், முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com