நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு

நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு வருகிற 15 மற்றும் 16-ந் தேதி நடைபெறுகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

நெல்லை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2,2A முதல் நிலை தேர்வு வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற நெல்லை மாவட்ட மைய நூலகமும் நெல்லை சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனமும் இணைந்து மாவட்ட மைய நூலகத்தில் 2 மாதங்களாக மாவட்ட மைய நூலகர் வயலட் உதவியுடன் 10 மாதிரி தேர்வுகள்  நடைபெற்றன.

அதேபோல் முழு பாடத்திட்டத்துடன் கூடிய இலவச மாதிரி தேர்வு வரும் 15,16-ந்தேதி ஆகிய 2 நாள் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது.

இலவச தேர்வை எழுத விரும்புபவர்கள் 9626252500, 9626253300 என்ற அலைபேசி எண்களில் பதிவு செய்து தேர்வில் பங்கேற்று வெற்ற பெற கேட்டுக்கொள்ளப் படுகிறது. இந்த தகவலை நெல்லை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com