பாளையங்கோட்டையில் சலூன் கடைக்காரர் திடீர் சாவு

பாளையங்கோட்டை அருகே சலூன் கடை நடத்தி வரும் மாரிமுத்து என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

பாளை அருகே உள்ள மனகாவலன்பிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 50). இவர் பாளை தெற்கு பஜார் பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார்.

நேற்று இவர் திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே அவர் மரண மடைந்தார்.

இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com