தமிழக காங்கிரசுக்கு அதிக உறுப்பினர்கள் சேர்த்ததில் நாங்குநேரி தொகுதி முதலிடம்

தமிழக அளவில் காங்கிரசுக்கு அதிக உறுப்பினர்களை சேர்த்ததில் நாங்குநேரி தொகுதி முதலிடத்தில் உள்ளது.
ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.
ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.
Published on

நெல்லை:

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சக்தி திட்டத்தின்படி காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சேர்த்தார்.

தற்போது ஆன்லைன் வழியிலான காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கையிலும் அதிக உறுப்பினர்களை சேர்த்து அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

சுமார் 6 மாத காலத்தில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் சட்டமன்ற தொகுதி வாரியாக காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையில் அவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே அவர் முதல்முறை அதிக உறுப்பினர்களை சேர்த்தபோது ராகுல்காந்தி எம்.பி. அவரை பாராட்டி, கவுரவித்து இருந்தார்.

தற்போதைய உறுப்பினர் சேர்க்கையில், தனது நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 26,478 உறுப்பினர்களை சேர்த்து முதலிடம் பிடித்து, மீண்டும் சாதனை படைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில், ஒரு தொண்டனாக இன்று வரையிலும் அயராது உழைத்துவரும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வை அக்கட்சி தலைவர்கள் பாராட்டினர்.

நாங்குநேரி தொகுதிக்கு அடுத்தப்படியாக செங்கத்தில் - 23,635 உறுப்பினர்களும், விளவங்கோடு தொகுதியில் - 21,515 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com