மேலப்பாளையத்தில் சாலைகளில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் அகற்றம்

மேலப்பாளையம் 48-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலைகளில் கொட்டப்பட்ட குப்பை அகற்றப்பட்டது.
சாலைகளில் கொட்டப்பட்ட குப்பை அகற்றப்பட்ட காட்சி.
சாலைகளில் கொட்டப்பட்ட குப்பை அகற்றப்பட்ட காட்சி.
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சி 48-வது வார்டுக்கு உட்பட்ட அம்பிகாபுரம் மற்றும் 49-வது வார்டுக்குட்பட்ட பங்காளப்பா நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சிலர் அம்பை சாலையில் குப்பைகளை கொட்டி வைத்திருந்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதைகளிலும் குப்பைகள் கொட்டப்பட்டதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் 48வது வார்டு கவுன்சிலர் ஆமினா பீவி மற்றும் மாநகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த சாலையில் உள்ள குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு குப்பை கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் அங்குள்ள பெரிய தெரு, சிறிய கால்வாய் பகுதிகளில் இருந்த கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com