திசையன்விளை மனோ கல்லூரியில் கணித மன்றம் தொடக்க விழா

திசையன்விளை மனோ கல்லூரியில் கணித மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
கணித மன்றம் தொடக்கவிழா நடந்தபோது எடுத்த படம்.
கணித மன்றம் தொடக்கவிழா நடந்தபோது எடுத்த படம்.
Published on

திசையன்விளை:

திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக கல்லூரியில் ராமானுஜர் கணித மன்றம் தொடக்க விழா கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. மாணவி சகாயஜெனட் வரவேற்று பேசினார்.

தட்சணமாற நாடார் சங்க கல்லூரி கணித துறை உதவி பேராசிரியர் பெல்சியா, கணித துறை தலைவர் ராகேஷ் ஆகியோர் பேசினர்.

மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

போட்டிகளில் முதல்பரிசு பெற்ற மாணவி சகாயஜெனிட்க்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக மாணவி முத்து செல்வி நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். முடிவில் மாணவி வளர்மதி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com