நெல்லையில் குட்கா விற்பனை செய்த பெண் உள்பட 8 பேர் கைது

நெல்லை குட்கா விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

நெல்லை:

நெல்லை மாநகர கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில் மாநகரில் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலப்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் எபினேசர் நேதாஜி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஆமிம்புரத்தை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவரும்,  நாச்சியார் காலனியை சேர்ந்த சுடலைமணி என்பவரும் குட்கா விற்பனை செய்து கொண் டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 

தச்சநல்லூர் சிதம்பரம் நகர் பிள்ளையார் கோவில் தெருவில்  பெட்டிக்கடையில் குட்கா விற்பனை நடப்பதாக இன்ஸ்பெக்டர் தங்க முத்துவுக்கு தகவல் கிடைத்தது. 

அங்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ராமேஷ்வரி என்பரது பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். 

டவுன் காட்சிமண்டபம் பகுதியில் பேட்டை போலீசார் நடத்திய சோதனையில் அங்கு குட்கா விற்ற பேட்டையை சேர்ந்த அபுதாகீர், அப்துல்பசீர் ஆகியோரை கைது செய்தனர். சந்திப்பு ஈரடுக்கு பாலம் பகுதியில் குட்கா விற்பனை செய்த சங்கரன், இசக்கிராஜ் ஆகியோரை போலீசார் கைது  செய்தனர். 

நேற்று ஒரே நாள் இரவில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குட்கா விற்ற பெண் உள்பட 8 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3.75 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com