5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்- விஸ்வ தமிழ் கழக கூட்டத்தில் கோரிக்கை

தி.மு.க.தேர்தல் அறிக்கையில் கூறியபடி விஸ்வகர்ம சமுதாயத்திற்கு 5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என விஸ்வ தமிழ் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விஸ்வ தமிழ் கழக கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
விஸ்வ தமிழ் கழக கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

திசையன்விளை:

திசையன்விளை ஸ்ரீமதி ஆவுடையம்மாள் திருமண மண்டபத்தில் விஸ்வ தமிழ் கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் முத்துவேல் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுடலை முத்து, பொதுச்செயலாளர் சிவன், பொருளாளர் சித்திரை முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா திருவடி முத்து வரவேற்று பேசினார். 

திசையன்விளை நகர செயலாளர்களாக பழனி மயில், மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

கூட்டத்தில், தி.மு.க.தேர்தல் அறிக்கையில் கூறியபடி விஸ்வகர்ம சமுதாயத்திற்கு 5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்துவது,  சாதிவாரி கணக் கெடுப்பை உடனடியாக தொடங்க தமிழக அரசை வலியுறுத்துவது,

திருச்சியில் கட்டப்பட்டுள்ள தியாகராஜ பாகவதர் மணி மண்டப பணிகளை விரைவாக முடிந்து திறக்க நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டு கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. 

கூட்டத்தில் நிர்வாகிகள் சுடலையாண்டி, இசக்கி முத்து, லெட்சுமணன், ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com