என்ஜினீயரை தாக்கிய 4 பேர் கைது

நெல்லையில் என்ஜினீயரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

நெல்லை:

நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்கியா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரி. 

இவர் தனது நண்பர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றங்கரை யோரம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பலுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றது.இதில் பலத்த காயம் அடைந்த ராஜ்குமார் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 

இதுதொடர்பாக தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வன சுந்தர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது ராஜ்குமாரை தாக்கியது வண்ணார்பேட்டையை சேர்ந்த ஷியாம் சுந்தர் (32), வல்லநாடு அருகே உள்ள படுகையூரை சேர்ந்த பாஸ்கரன் (35), வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்த செல்வா (34), கயத்தாரை சேர்ந்த மாரியப்பன் (35) என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com