நெல்லையில் தொழிற்சங்கத்தினர் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2-வது நாளான இன்று நெல்லையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை படத்தில் காணலாம்.
வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை படத்தில் காணலாம்.
Published on

நெல்லை:

பொதுத்துறை நிறுவனங் களை தனியார் மயமாக்க கூடாது, பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் நேற்று முதல் 2 நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சி.ஐ.டி.யூ., தொ.மு.ச. உள்ளிட்ட 12 தொழிற் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. 2-ம் நாளான இன்று நெல்லை வண்ணார் பேட்டையில் தொழிற் சங்கங் கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட தலைவர் காசி விஸ்வநாதன், சி.ஐ.டி.யூ.  மோகன், தொ.மு.ச. தர்மர் ஆகியோர் தலைமை தாங் கினார். இதில் பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பில் 150-க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர். 

இதே போல் பாளை தலைமை தபால் நிலையம் முன்பு ஊழியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப் ராஜ், நெல்லை மாவட்ட ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் சண்முக சுந்தரராஜ் தலைமை தாங்கினார். 

இதில் ஓய்வூதிய சங்க பொருளாளர் கிருஷ்ணன், நிர்வாகிகள் அருண்குமார், பழனி, வண்ணமுத்து, குத்தாலிங்கம் உள்ளிட்ட வர்கள் பங்கேற்றனர். 

தபால் ஊழியர்கள் இன்று பணிக்கு செல்லாமல் புறக்கணித்ததால் தபால் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ. கட்சி தொழிற் சங்க மான எஸ்.டி.டியு. சார்பாக மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆரீப் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் கல்வத், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் பர்கிட் அலாவுதீன், நிர்வாகிகள் செய்யது, சுல்தான் பாட்சா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

தொழிற்சங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவாக எஸ்.ஆர்.எம்.யூ நெல்லை கோட்டம் சார்பாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே யார்டு பகுதியில் இன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  

மத்திய சங்கத்தின் துணைத்தலைவர் சுப்பையா சிறப்புரையாற்றினார். கிளை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். கிளை செய லாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். இதில் 75-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

அப்போது மத்திய அரசை கண்டித்தும், பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த கோரியும் கோஷம் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com