2 முதியவர்கள் தற்கொலை

கூடங்குளம் மற்றும் உவரி அருகே 2 முதியவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் ராம் (வயது75). இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட் களாக அதிகளவில் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உவரி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இளையபெருமாள் (72), விவசாயி.

இவர் வயிற்று வலி காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமாகவில்லை யாம்.

இதனால் மனமுடைந்து கடந்த 27&ந்தேதி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com