நெல்லையப்பர் கோவிலில் இன்று மாலை தீர்த்தவாரி

நெல்லையப்பர் கோவிலில் இன்று மாலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் இன்று மாலை சித்ரா பவுர்ணமியையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சித்ரா பவுர்ணமி தீர்த்தவாரி கட்டளை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் வைத்து இன்று நடைபெறுகிறது.

இதனையொட்டி கோவிலில் இருந்து சுவாமி அம்பாள் ஆகியோர் அஸ்திரதேவர் மற்றும் அஸ்திர தேவி, சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளுடன் இன்று மதியம் மரச் சப்பரத்தில் எழுந்தருளினர்.

பின்னர் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை வழியாக சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி சென்று சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினர்.

அங்கு தீர்த்தவாரி மற்றும் அபிஷேக ஆராதனைகளுக்கு பின்னர் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு கோவிலை வந்தடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com