பாளை பஸ் நிலையத்தில் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டை மீண்டும் வைக்க வேண்டும்-காங்கிரசார் மனு

பாளை பஸ் நிலையத்தில் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டை மீண்டும் வைக்க வேண்டும் என மேயர், துணை மேயரிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு கொடுத்துள்ளனர்.
மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூவிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்த காட்சி.
மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூவிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்த காட்சி.
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் மக்களிடம் மனுக்களை வாங்கினர். மாநகராட்சி கமிஷனர் விஷ்ணுசந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

அப்போது மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:&

பாளை பஸ் நிலையம் கடந்த 1960&ம் ஆண்டு கட்டப்பட்டு அப்போதைய முதல்&அமைச்சர் காமராஜ ரால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது காமராஜரின் பெயரில் கல்வெட்டும் அங்கு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் பாளை பஸ் நிலையத்தை ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பித்து கட்டியபோது காமராஜர் பெயரில் இருந்த கல்வெட்டை மீண்டும் வைக்கவில்லை. எனவே அந்த கல்வெட்டை பஸ் நிலையத்தில் மீண்டும் வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பாளை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சமூக ஆர்வலரான பெர்டின்ராயர் என்பவர் அளித்த மனுவில், நெல்லை மாநகர பகுதியில் 14 தனியார் மருத்துவ மனைகள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக ஏற்கனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப் படையில் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்திருந்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

எனவே விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com