கோப்புப்படம்
உள்ளூர் செய்திகள்
முக்கூடல் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
முக்கூடல் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் இசக்கிமுத்து (வயது 21).
இவர் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 27-ந் தேதி வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை முக்கூடல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்தி–ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

