அம்பையில் இடி-மின்னல் தாக்கி 20 வாத்துகள் பலி; 300-க்கும் மேற்பட்டவை மயக்கம்

அழகு, நல்லக்கண்ணு ஆகியோர் வாத்துகளை மேய்த்து கொண்டிருந்தனர். வயலில் பலத்த சத்ததுடன் இடி விழுந்ததில் 20 வாத்துகள் உயிரிழந்தது.
இடி-மின்னல் தாக்கி பலியான வாத்துகள்.
இடி-மின்னல் தாக்கி பலியான வாத்துகள்.
Published on

கல்லிடைக்குறிச்சி:

அம்பாசமுத்திரத்தில் நேற்று இடி மின்னல் தாக்கி 20 வாத்துகள் பலியானதுடன் 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் மயங்கி விழுந்தது.

அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடை முடிவடைந்த நிலையில் அம்பை ஊர்க்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் மதுரையை சேர்ந்த சின்ன அழகு, நல்லக்கண்ணு ஆகியோர் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது நேற்று மதியம் பயங்கர இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. உடனே வாத்து மேய்த்து கொண்டிருந்த 2பேரும் அருகில் இருந்த மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வாத்துகள் மேய்ந்து கொண்டிருந்த வயலில் பலத்த சத்ததுடன் இடி விழுந்துள்ளது. இதில் அங்கிருந்த 20 வாத்துகள் அதிர்ச்சியில் உயிரிழந்தது. மேலும் 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் மயக்கமடைந்து விழுந்தது. மேலும் இடி, மின்னல் தாக்கியதில் இப்பகுதியில் பல வீடுகளில் டிவிகள் பழுதாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com