பெண் உள்பட 3 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
பெண் உள்பட 3 பேர் படுகாயம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சாலபோகம் மெயின் ரோட்டில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் (வயது47) .

இவர் தனது மனைவி மேனகாவுடன் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக கபிஸ்தலம் வழியாக திருவையாறு நோக்கி சென்றார்.

கருப்பூர் அகிலாண்டேஸ்வரி கோவில் அருகில் எதிரே அவர்கள் சென்ற போது கருப்பூர் குடியானத்தெருவை சேர்ந்த திவாகர்( 25) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் பாாலகிருஷ்ணன், அவரது மனைவி மேனகா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் திவாகரும் படுகாயமடைந்து கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com