என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பள்ளி மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்
  X

  பள்ளி மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சம்பவத்தன்று கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை
  • இது குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

  தருமபுரி,

  தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

  இது குறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மனைவியை தேடி வருகின்றனர்.

  அதேபோல் அதியமான் கோட்டை அருகே உள்ள கோம்பேறி பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் இண்டூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

  இது குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  அதேபோல் அரூர் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரது பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

  இது குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×