பண்ருட்டியில் காரை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல்:என்ஜினியர் மீது மனைவி புகார்

சவுந்தர்யா சென்ைனயில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சவுந்தர்யா இன்று பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்
பண்ருட்டியில் காரை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல்:என்ஜினியர் மீது மனைவி புகார்
Published on

கடலூர்:

பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 26 ) சிவில் என்ஜியர் இவரது மனைவி சவுந்தர்யா (24). இவர் சென்ைனயில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்களுக்கு திருமணமாகி ஓர் ஆண்டு ஆகிறது. திருமணமான ஒரு சில நாட்களிலிருந்து கணவர் சூர்யா மற்றும் சூர்யாவின் தந்தை ஏழுமலை தாய் கலைமணி, சகோதரர்கள் லோகேஷ் ,சர்வேஷ் ஆகியோர்கள் வரதட்சணையாக ரூ.10 லட்சம் பணம் கேட்டு சவுந்தர்யாவை ஆபாசமாக திட்டி காரை ஏற்றிக் கொன்று விடுவதாக மிரட்டி வாழவிடாமல் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக சவுந்தர்யா இன்று பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி செய்து சவுந்தர்யாவின் கணவர், மாமனார், மாமியார், கொழுந்தனார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com