தொப்பூர் கணவாய் பகுதியில் லாரிகள் மோதல்-டிரைவர் படுகாயம்

முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் சுண்ணாம்பு பாரம் ஏற்றி வந்த லாரி மோதியது.போலீசார் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொப்பூர் கணவாய் பகுதியில்  லாரிகள் மோதல்-டிரைவர் படுகாயம்
Published on

தருமபுரி,

சென்னையில் இருந்து சுண்ணாம்பு பாரம் ஏற்றிக்கொண்டு மேட்டூருக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை விருதாச்சலம் ஆர்.சி.கோயிலான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது41) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த லாரி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை இரட்டை பாலம் அருகே வந்தது.

அப்ேபாது முன்னால் சென்ற மற்ெறாரு லாரியின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக சுண்ணாம்பு பாரம் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் சார்லசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனே போலீசார் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com