முள்ளக்காட்டில் தொடர் திருட்டை தடுக்க மக்கள் கோரிக்கை

முள்ளக்காடு முத்தையாபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

முள்ளக்காடு:

தூத்துக்குடி நகர வர்த்தகர் சங்கத்தின் துணைத் தலைவரும், முள்ளக்காடு எம்.சவேரியார்புரம் வட்டார வியாபாரிகள் சங்க தலை வருமான முனிய தங்கம் நாடார் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

முள்ளக்காடு காந்திநகரில் உள்ள எனது வீட்டில் வாடகைக்கு குடி இருப்பவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமான  மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். 

இதேபோல் சமீபத்தில் எனது வீட்டில் இருந்த ஆட்டு கிடா ஒன்றும் திருட்டு போய்விட்டது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

சமீபத்தில் முள்ளக்காடு பஜாரில் பூட்டியிருந்த கடையை உடைத்து செல்போன்கள் திருடப்பட்டது. 

முத்தையாபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com