எட்டயபுரம் அருகே வாலிபர் மர்மச்சாவு

எட்டயபுரம் அருகே மாரியப்பன் என்ற வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழ் நாட்டு குறிச்சி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் மாரியப்பன்  (வயது 28). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஆலையில் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார்

மாரியப்பன் மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்இரவு 8 மணி அளவில் முத்துலாபுரம் ஆற்றுப்பகுதியில்  மதுபோதையில் சுயநினைவின்றி கிடப்பதாக, அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தவர்கள்,மாரியப்பன் குடும்பத்தினர்  தகவல் தெரிவித்தனர்

உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது மாரியப்பன் சுயநினைவின்றி வாந்தி எடுத்து கொண்டிருந்துள்ளார்.

அவரை ஆட்டோ மூலம்  எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அங்கு பரிசோதித்த மருத்துவர் மாரியப்பன் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறியுள்ளார். 

இதனையடுத்து  அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அதிக மது அருந்தியதன் காரணமாக மாரியப்பன் உயிரிழந்தாரா? அல்லது வேறு  ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com