பேய்க்குளம், பழனியப்பபுரத்தில் நீர் மாதிரி சேகரிப்பு

பேய்க்குளம், பழனியப்பபுரத்தில் சுகாதாரத்துறையினர் நீர் மாதிரி சேகரித்தனர்.
பழனியப்பபுரத்தில் சுகாதாரத்துறையினர் நீர் மாதிரி சேகரித்த காட்சி.
பழனியப்பபுரத்தில் சுகாதாரத்துறையினர் நீர் மாதிரி சேகரித்த காட்சி.
Published on

சாத்தான்குளம்:-

பேய்க்குளம் பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் தண்ணீர் சுவை மற்றும் கிருமியின் தாக்கம் குறித்தும் கண்டறிய உத்தரவிடப்பட்டிருந்தது.  

இதையடுத்து சாலை புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய  சுகா தார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஷ்குமார் ஆகியோர் பேய்க்குளம், பழனியப்பபுரம் பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வரும் தண்ணீர் மற்றும் பம்பிங் நிலையத்தில் தண்ணீர் மாதிரிகளை சேகரித்தனர்.

சேகரித்த மாதிரி  தண்ணீரை கோவில்பட்டி நீர் பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை நடத்தி நீரினால் ஏற்படும் நோய்கள் குறித்தும், கிருமிகள் குறித்தும் தகவல் தெரிவித்ததும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்  என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com