சாத்தான்குளம் அருகே காமன்வெல்த் போட்டிக்கு தேர்வான கிராமத்து கல்லூரி மாணவன்

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் காமன்வெல்த் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.
காமன்வெல்த் போட்டிக்கு தேர்வான கிராமத்து கல்லூரி மாணவன் ஜஸ்வின் ஆல்ட்ரின்.
காமன்வெல்த் போட்டிக்கு தேர்வான கிராமத்து கல்லூரி மாணவன் ஜஸ்வின் ஆல்ட்ரின்.
Published on

சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவரின் மகன் ஜஸ்வின் ஆல்ட்ரின் என்ற மாணவன் மெட்ராஸ் கிறிஸ்டின் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்து வருகிறார். இவர் சிறு வயதிலிருந்தே பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு பதக்கங்களையும், சான்றிதழ்களையும், அடுக்கடுக்காக குவித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில் 8.26 மீட்டர் தூரம் நீளம் தாண்டி அரிய சாதனை படைத்தார். இதனால் உலக சாம்பியன்ஷிப், ஏசியன் போட்டிகள்மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட மூன்று போட்டிகளில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளார்.

மேலும் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள உலக ஒலிம்பிக் போட்டியிலும் இவர் பங்கேற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ஜஸ்வின் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் ஒரு கிராமத்தில் பிறந்து காமன்வெல்த், ஏசியன் போட்டி மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகி இருக்கும் இந்த கிராமத்து மாணவனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com