குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ரூ.47 லட்சம் உண்டியல் காணிக்கை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் மொத்தம் ரூ.47 லட்சம் வசூலானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. தென்காசி இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் கோமதி தலைமையில் 15 உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

கோவில் நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் பகவதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். 

இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ. 47 லட்சத்து 11ஆயிரத்து 760 ரொக்கப் பணம் இருந்தது. இதில் தங்கம் 268 கிராம் 200 மில்லி கிராம், வெள்ளி ஒரு கிலோ 68 கிராம் 600 மில்லி கிராம் இருந்தது.

இந்த உண்டியல் எண்ணிக்கையில் கோவில் கணக்கர் டிமிட்ரோ, கோவில் பணியாளர்கள் குலசேகரன்பட்டினம் திருஅருள்மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிறைகுடியிருப்பு சிவந்தி பெண்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com