சாத்தான்குளத்தில் பிடிபட்ட ஆமையை குளத்தில் விட்டனர்

சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் ரஸ்தா தெருவில் ழிவு நீர் கானல் வழியாக சிறிய ஆமை ஒன்று நீந்தி வந்துள்ளது. அதனை பொதுமக்கள் பிடித்து குளத்தில் விட்டனர்.
சாத்தான்குளத்தில்  பிடிபட்ட ஆமையை  குளத்தில்  விட்டனர்
சாத்தான்குளத்தில் பிடிபட்ட ஆமையை குளத்தில் விட்டனர்
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் ரஸ்தா தெருவில் சிறுவர்கள்   கடந்த
26-ந்தேதி  விளையாடி  கொண்டிருந்த போது அதே பகுதியில்  உள்ள கழிவு நீர் கானல் வழியாக சிறிய ஆமை ஒன்று நீந்தி வந்துள்ளது. 

இதனை சிறுவர்கள் பிடித்து காட்சி பொருளாய் வைத்திருந்தனர். இதுகுறித்த வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் வர தாமதம் ஆனதால் சிறுவர்கள் அந்த ஆமையை சேகர் மனைவி தங்கப்பிராட்டி (47) என்பவருக்கு சொந்தமான வீட்டு  கிணற்றில் விட்டனர். 

இந்நிலையில் தகவலறிந்து வனத்துறை வனவர் சங்கர் , நேற்று கிணற்றில் கிடந்த ஆமையை மீட்டு சாத்தான்குளம் கரையடி குளத்தில் விட்டனர். 

குளத்தில் வாழும் ஆமை  திடீரென மழையின் காரணமாக வடிந்து வரும் நீரில்  நீந்தி  இவ்வாறு வருவது உண்டு. அதேபோல் இந்த ஆமை வந்துள்ளது. 

இதே போல் அரிய வகை உயிரினங்கள் நீரிலோ அல்லது திசை மாறி வந்தது கண்டறியப்பட்டால் வனத்துறையினருக்கு  பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்  என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com