நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் சுமங்கலி பூஜை

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.
சுமங்கலி பூஜையில் கலந்து கொண்டவர்கள்.
சுமங்கலி பூஜையில் கலந்து கொண்டவர்கள்.
Published on

திருச்செந்தூர்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி ஞானப்பிரசன்னாம்பிகை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வரர் கோவிலில் மகா வித்யா கணபதி யாகம் மற்றும் சுமங்கலி பூஜை பிரதோஷ அறக்கட்டளை தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. 

யாக பூஜை, சுமங்கலி பூஜையை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கும் பால், தயிர் உள்பட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடந்தது.தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் வைத்திய லிங்கம் என்ற பசுமை சித்தர், ஜெய் இண்டர்நேஷனல் பள்ளி சேர்மன் சுப்பையா, பா.ஜ.க. மாநில மகளிர் அணி பொதுப் செயலாளர் நெல்லையம் மாள், சி.பா.சிவந்தி ஆதித்தனார் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார், பட்டணம் கணேசன், பழக்கடை திருப்பதி, ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட ஆலோசகர் சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரதோஷ அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com