

தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில் தென்தமிழகத்திலேயே தனிச்சிறப்பாக குருபகவான் குருமகாலிங்கேஸ்வராக தனி சந்தியில் இங்கு மட்டுமே எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
ஆன்மிக சிறப்புபெற்ற குரு மகாலிங்கேஸ்வரருக்கு ஆண்டு தோறும் மஹா சிவராத்திரி விழா ‘’சாக்தஸ்ரீ’’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான மஹா சிவராத்திரி விழா வருகிற 1-ந் தேதி(செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது.
அன்று காலை 10மணிக்கு மஹா கணபதி, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மஹாலெட்சுமி ஹோமத்துடன் மஹா சிவராத்திரி விழா தொடங்குகிறது.
மாலை 6மணிக்கு நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மஹா பூஜை தீபாரதனையும், இரவு 9மணிக்கு மஹா சிவராத்திரி வழிபாடு பூஜைகளும், மஹா பூர்ணாகுதி, அபிஷேக அலங்கார தீபாரதனைகளும் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெறுகிறது.
சிறப்பு விருந்தினராக மலேசியா கடாரம் டத்தோ செந்திநாதன் பங்கேற்கிறார். இரவு 12மணிக்கு மஹா அபிஷேகம், தமிழ்மறை யில் தேவார திருவாசக பாராயணமும்,
தொடர்ந்து அதிகாலை 2மணிக்கு சதுர்வேத பாராயணமும், அதிகாலை 4மணிக்கு அபிஷேக அலங்கார தீபாரதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கு தலுடன் மஹா சிவராத்திரி விழா நிறை வடைகிறது.
தொடர்ந்து 2-ம் தேதி(புதன் கிழமை) சர்வ அமாவாசை மஹா வழிபாடு நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘’சாக்தஸ்ரீ’’ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் விழாக்குழுவினர், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.