திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி அம்பாளுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி வள்ளி அம்பாளுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அம்பாளுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பால்குடம் எடுத்து வந்தவர்களை படத்தில் காணலாம்.
அம்பாளுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பால்குடம் எடுத்து வந்தவர்களை படத்தில் காணலாம்.
Published on

திருச்செந்தூர்:

தமிழ்நாடு வேடுவர் நல சங்கம் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு பால் குடம் எடுத்து சுவாமி வள்ளி அம்பாளுக்கு சீர் வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறை வேற்றுவது வழக்கம். இந்நிலையில் தமிழ்நாடு வேடுவர் நலச்சங்கம் சார்பில் திருச்செந்தூர் சுப்பிர மணியசுவாமி கோவிலுக்கு பால் குடம் எடுத்தும் ,வள்ளி அம்பாளுக்கு சீர் வரிசை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள ஆனந்த விநாயகர் கோவிலிருந்து பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பால் குடம் எடுத்து வடக்கு ரத வீதி,

சன்னதி தெரு வழியாக மேலும் சுவாமி, வள்ளி அம்பாளுக்கு பல்வேறு தம்பூலன்களில் பட்டுசேலை, பூ, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் அடங்கிய சீரிவரிசைகளை ஊர்வலமாக கோவிலுக்கு  எடுத்து வந்தனர்.

பின்னர் கோவிலில் மூலவரை வழிபட்டுவிட்டு வள்ளியம்மன் சன்னதியில் சீர்வரிசை கொடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com