தூத்துக்குடி கடையில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு

தூத்துக்குடியில் ராஜா என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 20 செல்போன்களை மர்மநபர் கொள்ளையடித்து சென்றுள்ளார். இது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் ராஜா (வயது35). இவருக்கு சொந்தமான செல்போன் கடை தூத்துக்குடி-எட்டய புரம் மெயின் ரோட்டில் உள்ளது. நேற்றிரவு ஊழியர் கள் கடையை அடைத்து விட்டு சென்றனர்.

இன்று காலை வழக்கம் போல் கடையை திறப் பதற்காக வந்தனர். அப்போது கடை யின் பூட்டு உடைக்கப் பட்டு கிடந்தது.  

இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது கடையில்  உள்ள ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 20 செல்போன்கள் மற்றும் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த மாதிரி செல்போன்கள் 30 ஆகியவை கொள்ளை போயிருந்தது.

இதுகுறித்து அவர்கள் மத்திய பாகம் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சி களை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் பிச்சைக் காரன் போல் வேடம் அணிந்து கையில் சாக்கு பையுடன் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

வழக்கமாக இரவு நேரங்களில் கடையின் முன்பு யாசகம் பெறுபவர்கள் சிலர் படுத்து தூங்குவது வழக்கம். அவர்களில் ஒருவர் கொள் ளையில் ஈடுபட்டு இருக் கலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக சி.சி.டி.வி. காமிராவில் பதி வான உருவங்களை வைத்து கொள்ளையனை தேடி பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com