சாத்தான்குளம்-முதலூர் ரோட்டில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

சாத்தான்குளம்-முதலூர் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் இருந்து முதலூர் செல்லும் வழியில் மேல்நிலை பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி, கிறிஸ்தவ ஆலயமும் உள்ளது.

இந்த ஆலயத்தின் வலது புறமாக முதலூர், தட்டார்மடம், திசையன்விளை, உவரி உள்ளிட்ட ஊர்களுக்கு இடதுபக்கம் வழியாக செல்லும் சாலையில் பன்னம்பாறை,  நாசரேத், வாழையடி, நெல்லை, தூத்துக்குடி போன்ற உள்ளிட்ட பல நகரங்களுக்கும் தினசரி வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றன.

இந்த சந்திப்பு பகுதியில் பொதுமக்களும் வியாபாரிகளும் தினசரி கடைகளுக்கு வந்து செல்கின்றனர்.

 மேலும் ஜங்ஷன் பிரிவான இந்த முதலூர் சாலையில் செல்கின்ற வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் எந்நேரத்திலும் வாகன விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்களும் மற்றும் அரசியல் கட்சியினரும், அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து ம.தி.மு.க சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதில் முதலூர் சாலையில் வாகனங்கள் வலது, இடது பக்கங்களில் பிரிந்து சென்று கொண்டிருக்கின்றன.

செல்கின்ற வாகனங்கள் வேகமாக செல்வதால் உயிர் சேதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பகுதியை பார்வையிட்டு முதலூர் செல்லும் சாலையில் வாகன வேகத்தை கட்டுப்படுத்தி  வேகத்தடை உடனே அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com