காயல்பட்டினத்தில் 100 இடங்களில் ரம்ஜான் தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு காயல்பட்டினத்தில் 100 இடங்களில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது.
காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்த போது எடுத்த படம்.
காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்த போது எடுத்த படம்.
Published on

ஆறுமுகநேரி:

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பள்ளி–வாசல்கள், தர்காக்கள் மற்றும் பெண்கள் வழிபடும் தைக்காக்கள் உள்பட சுமார் 100 இடங்களில் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது.

காயல்பட்டினம் கடற்கரையில் நேற்று முன்தினம் ஹிஜ்ரி கமிட்டி சார்பிலும், நேற்று ஐ. ஐ.எம். அமைப்பின் சார்பிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த நிலையில் இன்று தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளையின் சார்பில் நடந்த சிறப்பு தொழுகையில் பெண்கள் உள்பட சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர். தொழுகையை மவுலவி அபு சலாம் நடத்தினார்.குத்பா பிரசங்கத்தை கல்லிடைகுறிச்சி யாசீர் நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் மக்கின், பொருளாளர் சுபுஹான் ஆகியோரும் பங்கேற்றனர். அனைவரும் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் இடையே ஏழைகள் நலநிதி திரட்டப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com