

நாசரேத்:
நாசரேத் பேரூராட்சியில் கவுன்சிலர்களுக்கான முதல் கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் நிர்மலாரவி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அருண்சாமுவேல் என்ற தம்பு, செயல் அலுவலர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அத்தியாவசிய பணிகளான குடிநீர் வசதி, சாலைவசதி, தெருவிளக்கு வசதி ஆகியவை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்வது குறித்தும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் அடிக்கடி விபத்துக்களையும், சுகாதார கேடுகளையும் ஏற்படுத்தும் பன்றி, நாய்களை அப்புறபடுத்துவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதில் வார்டு கவுன்சிலர்கள் பத்திரகாளி, அனிசாலமோன், ஐஜினஸ், மனோராஜ், ஜெயா, ரதி, சாமுவேல், ஸ்டெல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.