உடன்குடியில் 3 மாதத்தில் வறண்டுபோன சடையநேரி குளம்

உடன்குடி ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது சடையநேரிகுளம் ஆகும். இங்கு தண்ணீர் நிரம்பி இருந்த நிலையில் கடந்த 3 மாதத்தில் தண்ணீர் முழுமையாக வற்றிவிட்டது.
வறண்ட நிலையில் காணப்படும் சடையநேரி குளம்.
வறண்ட நிலையில் காணப்படும் சடையநேரி குளம்.
Published on

உடன்குடி:

உடன்குடி ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது சடையநேரிகுளம் ஆகும்.

தாமிரபரணி ஆற்றின் உபரிநீர் கால்வாய் உள்ள சடையநேரிகால்வாய் மூலமாகவும், கருமேனிஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை மூலமாகவும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழை நீர் காட்டாற்று வெள்ளம் மூலமாகவும் இது தண்ணீர் பெற்று நிரம்பி வருகிறது.

2 மாதங்களுக்கு முன்பு இப்படி தான் நிரம்பியது. இக்குளத்தில் இருந்து தான் 225 ஏக்கர் பரப்பளவுள்ள தாங்கைக்குளம் மற்றும் புதிதாக தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்ட அய்யனார்குளம், நரிக்குளம், தண்டுபத்துவடக்குகுளம், மானாட்சிகுளம், குண்டாங் கரைகுளம், சிறுகுளம், இடையர்குளம், தேரிகுண்டாங் கரைகுளம் போன்றவை நீர் பெறுகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சடைய நேரிகுளம், நங்கைமொழி, மெஞ்ஞானபுரம், லட்சுமிபுரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 400 ஏக்கர் பரப்பளவு உடையது.

ஆனால் அவற்றுள் பெரும்பகுதி தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

கால்வாய் பகுதியில் கூட சிறிது நீர் நிற்க, சரியான மறுகால் வசதியின்றி ஷட்டர்கள் பழுதடைந்தும், குளம் மேடாகியும் தற்போது நீர்நிரம்பி வழிந்த இடம் போலவே இல்லாமல் வறண்ட நிலப்பகுதி போல காணப்படுவதை கோரம்பள்ளம் டிவிஷன் நீர்வள உதவி பொறியாளரை வரவழைத்து காண்பித்தோம்.

தற்போது வெயிலின் தாக்கத்தால் 3 மாதங்கருக்கு முன்பு முழுமையாக நிரம்பி வழிந்த சடையநேரி குளத்தில் தற்போது தண்ணீர் இல்லை.

மீண்டும் இக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும்என்று கிராமப்புற விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com