தேர்தல் விதிகளை மீறினால் வழக்குப்பதிவு-போலீசார் எச்சரிக்கை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாசரேத் பேரூராட்சியில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கான நல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் பேசிய காட்சி.
சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் பேசிய காட்சி.
Published on

நாசரேத்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாசரேத் பேரூராட்சியில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கான நல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதற்கு இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் ஆகியோர் வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.  

கூட்டத்தில் வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது 20 நபருக்கு மேல் செல்லக்கூடாது எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும்,  கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பொது கூட்டங்களில் 100 நபருக்கு மேல் அனுமதிக்க கூடாது எனவும், தேர்தல் விதிமுறைகளை மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டன.

இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், தங்கேஸ்வரன், தனிப்பிரிவு காவலர் அந்தோணி மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com