ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விளையாட்டு மைதானம் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி அங்கு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.
ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.
Published on

தூத்துக்குடி:

தமிழகத்தில் தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் பேசினார். அவர் பேசுகையில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி அதிக கிராமங்களை கொண்டது. இங்குள்ள இளைஞர்கள் ராணுவம் மற்றும் காவல் துறையில் வேலையில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கு தங்களது உடல் திறனை மேம்படுத்திக் கொள்ள போதுமான விளையாட்டு மைதானங்கள் இங்கு இல்லை. எனவே ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் அனைத்து வசதிகளும் கொண்ட அரசு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் சாத்தான்குளம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாணவியரின் விளையாட்டு திறமையை மேம்படுத்த அங்கு ஒரு உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அவரது கேள்விக்கு பதில் அளித்து பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள ஸ்ரீ மூலக்கரை கிராமத்தில் அரசு இடம் 18 ஏக்கர் உள்ளது.

இந்த இடம் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அந்த அடிப்படையில் அந்த இடத்தில் முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்துள்ள சட்டமன்ற தொகுதிகளில் மினி இன்டோர் ஸ்டேடியம் என்ற திட்டத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்கவும், சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com